M. P. Sivagnanam
காந்தியடிகளைப் பற்றிய இச்சிறு நூல் அப்பெரியாரின் மறைவுக்குப் பிறகு யான் 'தமிழ் முரசில்' எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பே யாகும். காந்தியடிகளின் வாழ்நாளில் அவரைப் பின்பற்றிய தொண்டர்களில் யானும் ஒருவன் என்பதைத் தமிழகம் நன்கறியும். அடிகளின் அடிச் சுவட்டைத் தொடர்ந்து செல்லத் துவங்கிய பிறகு எனது வாழ்க்கையே முற்றும் மாறிவிட்டது. அறி யாமை என்னும் இருளில் அல்லற்பட்ட என்னை தமது அன்பொளி காட்டி ஆட்கொண்டு அரசியல் வாதியாக்கிய அப்பெருமானின் பெருமையை விரி வாக எழுதுவதற்கு எனக்கு ஆசையிருந்தும் போதிய ஆற்றலில்லை. ஆம்; கற்றோருமறியாப் பேரறிவாளரன்றோ, காந்தியடிகள்.என்றாலும், அடிகள் கொலையுண்டார் என்ற செய்தி கேட்டு ஆறாத் துயரால் யான் வெளியிட்ட கருத்துக்களை இன்ப நிலையத்தாரின் வற்புறுத்தலின் பேரில் இச் சிறு நூலாக உருவாக்க இசைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.காந்தியடிகளின் தலைமையின் கீழ் நடந்த போரில் ஏழை-பணக்காரர், ஆண்-பெண் என்ற வித்தியாசமில்லாமல் எண்ணற்ற மக்கள் ஈடு பட்டு, அவர் காட்டிய வழியில் கடமையைச் செய்தனர்.அந்தப் போரில் தமது தொழிலையும் விட்டு, குடும்ப நிலைமையையும் கவனியாது முழு நேரமும் ஈடுபட்டுச் சுமார் இருபத்திரண்டு ஆண்டுகள் பாடுபட்டவர் திரு. ம. பொ. சிவஞானம்.காந்தியடிகளைப் போராட்டத்திற்குரிய தளபதியாக மட்டுமல்லாமல், தமது வாழ்க்கைக்கு வழிகாட்டிய குருவாகவும் போற்றி, அவர் அவர் காட்டிய அகிம்சை நெறியை அன்புடன் ஏற்று அதன்படி நடப்பவர் ம.பொ.சி.காந்தியடிகளின் சேவை தேவைப்படும் இந்த நேரத்தில் மதவெறியின் பிரதிநிதியான மாபாதகன் ஒருவனின் செயலால் அவர் மறைந்தார்.